Skip to content

முன்விரோதம்… கரூரில் வாள்-கத்தி அரிவாள்-துப்பாக்கியுடன் இருந்த 2பேர் கைது…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் போலீசாரை பார்த்தவுடம் திரும்பி வேகமாக செல்ல முற்பட்டார். அவரை பிடித்து விசாரித்தபோது, இரு சக்கர வாகனத்தின் முன்பகுதியில் வெள்ளை சாக்கில் அரிவாள் இருந்ததைப் பார்த்த போலீசார், அவரை கைது செய்து தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் யுவராஜ் என்பதும், தாந்தோன்றிமலை, கருப்பகவுண்டன் புதூர் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. மேலும், அவருடை வீட்டில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் வாள், சூரி கத்தி, அரிவாள், நாட்டு துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை

பறிமுதல் செய்தனர்.

மேலும், இடப் பிரச்சினை காரணமாக சித்ராதேவி என்பவருக்கு ஆதரவாக இருக்கும் யுவராஜ் கரூர் மாவட்டம், புலியூரை அடுத்த வெள்ளாளபட்டி கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன், தமிழ்நாடு அம்பேத்கர் மக்கள் இயக்கப் பொறுப்பாளராக இருந்து வருபவருடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அவரை கொலை செய்ய வேண்டும் எனும் நோக்கில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும், இதேபோல் ரவிச்சந்திரனும் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் ரவிச்சந்திரன் வீட்டை சோதனை செய்தனர். அங்கு மான் கொம்பு, நாட்டு துப்பாக்கி, அரிவாள், வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து ரவிச்சந்திரனையும், யுவராஜையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!