நெல்லை மாவட்டம் முக்கூடலில் அமைந்துள்ள பாலகன் சரஸ்வதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியும், எல்ஐசியும் இணைந்து கல்லூரி வளாகத்தில் ‘எதிர்காலத்திற்காக 100 மரக்கன்றுகள் ‘என்ற தலைப்பில், மரக்கன்று நடும் விழா நடத்தியது. கல்லூரி செயலாளர் ஏ.பி. பாலகன் ஆறுமுகசாமி ஆலோசனையின் பேரில் கல்லூரி முதல்வர் முனைவர் கிருஷ்ணவேணி முன்னிலையில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சேரன்மகாதேவி எல்ஐசி கிளை அபிவிருத்தி அதிகாரி ஏ.வெங்கடாசலம், மேலாளர் அருண் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர். கல்லூரி மாணவிகள் மரக்கன்றுகளை நட்டனர். மரக்கன்றுகள் நட்டு அதனை பேணி பாதுகாத்து வளர்ப்பதன் அவசியம் குறித்து முதல்வர் கிருஷ்ணவேணி மாணவிகளுக்கு விளக்கினார்.