முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு கல்லூரி ஆண்டு விழா ஆனது 30-4-2024 அன்று கொண்டாடப்பட்டது. இதில் நாசரேத்தைச் சேர்ந்த முன்னாள் எம்பி திரு.A D K ஜெயசீலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இதில் கல்லூரியின் செயலாளரும் மற்றும் நிறுவனருமான திரு A B பாலகன் ஆறுமுகசாமி அவர்களும் கல்லூரியின் முதல்வர் டாக்டர் R . கிருஷ்ணவேணி அவர்களும் விழாவினை சிறப்பித்தனர் இந்த விழாவில் முதல்வர் அவர்களால் கல்லூரியின் ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது கல்லூரியின் ஆண்டு விழாவினை முன்னிட்டு மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது மாணவிகள் மூன்று பிரிவுகளாக பிரிந்து ஆரஞ்சு மஞ்சள், பச்சை என்ற குழுமங்களாக போட்டியில் பங்கேற்றனர் இதில் ஆரஞ்சு நிற குழுமங்களாக பெரும்பான்மையான போட்டிகளில் வெற்றி பெற்று வெற்றியாளராக வாகை சூடினர் இவ்விழாவில் பல்கலைக்கழக தேர்வில் கல்லூரியின் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு ஒவ்வொரு பாடப்பிரிவுகள் வாரியாக பரிசுகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில் பேராசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் என அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலை -அறிவியல் மகளிர் கல்லூரியில் முதலாம் கல்லூரி ஆண்டு விழா
- by Authour
