திருச்சிமுக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கிய சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆண்
சடலத்தை மீட்டனர். இந்நிலையில் ஜுயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் போலீசார் விசாரணை செய்ததில் – தர்மபுரி மாவட்டம் நெல்லை நகர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.