Skip to content

நடப்பு ஐபிஎல் தொடருடன், டோனி ஓய்வு பெறுவார்?

  • by Authour

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சிலதினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இதில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில்  மார்ச் 23ம் தேதி  மும்பை இந்தியன்சுடன்  சேப்பாக்கத்தில் மோதுகிறது.

இதற்காக  சிஎஸ்கே பயிற்சி முகாம் இன்று சேப்பாகதக்தில் தொடங்குகிறது. இதற்காக  டோனி நேற்று   சென்னை வந்தார். அப்போது அவர் அணிந்திருந்த டீ – ஷர்ட்டில் ‘மோர்ஸ்’ வகை எழுத்து குறியீடுகளான புள்ளி மற்றும் கட்டங்கள் இடம் பெற்று இருந்தன. அதன் அர்த்தம் ‘கடைசியாக ஒரு முறை’  என்பதாகும்.

இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடருடன் ஓய்வு பெற போவதை மறைமுகமாக டோனி  தெரிவித்துள்ளாரா? என்று  கிரிக்கெட் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

டோனிக்கு 44 வயது ஆகிவிட்டது. தற்போது அவர் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே ஆடுகிறார். அதில் இருந்தும் இந்த வருடத்துடன்  விடை பெற்று விடுவார் என ரசிகர்கள்  கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

error: Content is protected !!