Skip to content

திரு.மாணிக்கம் ஒர் அற்புதமான படைப்பு.. நடிகர் ரஜினி பாராட்டு

நந்தா பெரியசாமி இயக்கத்தில் ஜி.பி.ஆர்.கே. சினிமாஸ் தயாரிப்பில் சமுத்திரக்கனி, அனன்யா நடித்துள்ள படம் திரு.மாணிக்கம். இப்படத்தில் நாசர், தம்பி ராமையா, பாரதிராஜா, கருணாகரன், இளவரசு போன்ற நடிகர் பட்டாளம் நடித்துள்ள நிலையில் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியான நிலையில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் படக்குழுவினரை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ரஜினி இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு நல்ல படத்துக்கு அடையாளம், படம் பார்த்த பிறகு அதில் வரும் காட்சிகள், கதாபாத்திரங்கள் ஒரு மூன்று, நான்கு நாட்களுக்காவது நினைவில் வந்துகொண்டே இருக்கணும். அந்த படத்தில் வரும் எதாவது ஓர் நல்ல விஷயம், நம் வாழ்க்கையில் நாமும் கடைபிடிக்கணும் என்ற எண்ணம் உருவாகணும். அந்த மாதிரி சமீபத்தில் நான் பார்த்த திரு.மாணிக்கம் என்கிற படம் ஓர் அற்புதமான படைப்பு. உண்மை சம்பவத்தை வைத்து திரைக்கதை, வசனத்தை எழுதி சிறப்பாக இயக்கியிருக்கும் நந்தா பெரியசாமி, தான் ஓர் அற்புதமான இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார். திரையுலகில் அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

இந்த திரைப்படம் இவ்வளவு சிறப்பாக உருவாக பணியாற்றியிருக்கும் மைனா சுகுகுமார், விஷால் சந்திரசேகர், குணா ரகு ஆகியோருக்கும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் எனது அருமை நண்பர் சமுத்திரக்கனி, மதிப்பிற்குரிய பாரதிராஜா மற்றும் அனைத்து நடிகர், நடிகைகளுக்கும், இந்த படத்தை தயாரித்திருக்கும் ரவி குமார் மற்றும் என்னுடைய அருமை நண்பர் லிங்குசாமி மற்றும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதை சமுத்திரக்கனி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து ரஜினிக்கு நன்றி தெரிவித்துள்ளார்

error: Content is protected !!