மக்களவை தேர்தலின்போதே தங்களுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக கூறியிருந்தது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கடந்த மாதம் கூறியிருந்தார். இன்று பேட்டி அளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி, தேமுதிகவுக்கு எம்.பி. சீட் தருவதாக சொல்லவில்லை, எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்று கூறிவிட்டார்.
எடப்பாடியின் இந்த பதில் குறித்து, தேமுதிக அலுவலகத்தில் இருந்த அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் கேட்டபோது, அவர் எந்த பதிலும் அளிக்காமல் போய்விட்டார். எடப்பாடியின் பேட்டியால் அவர் அப்செட் ஆன நிலையில் காணப்பட்டார்.