திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே தனது அலுவலகத்தை திறந்து உள்ளார். புதிய அலுவலக திறப்பு விழா இன்று காலை நடந்தது. அமைச்சர்கள் கே.என். நேரு ,அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அலுவலகத்தை திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றினர்.
எம்பி துரை.வைகோ அனைவரையும் வரவேற்றார். மாநகர திமுக செயலாளர் மதிவாணன் , மதிமுக துணை பொதுச்செயலாளர் டாக்டர் ரொகையா ,மதிமுக மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு,மணவை தமிழ்மாணிக்கம், சேரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.