மே தினத்தை முன்னிட்டு இன்று (01/05/2023), தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில்
கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு கலந்துரையாடினர்.
கிராம சபை கூட்டத்தில்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்ம சக்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.