திரைப்பட காமெடி நடிகர் லட்சுமி நாராயணன் என்கிற சேஷூ காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் சேஷூ. சேஷூவின் உயர் சிகிச்சைக்காக ரூ. 10லட்சம் நிதி தேவைப்பட்டதால் அவரின் நண்பர்கள் பலரும் நிதி திரட்டி வந்தநிலையில் காலமானார்.
மண்வாசனை படத்தில் காந்திமதி நடித்த கதாபாத்திரத்தை லொள்ளு சபா நிகழ்ச்சியில் காமெடி கலந்துகொண்டு வௌிபடுத்தியவர் சேஷூ. நடிகர் சேஷூவின் மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சேஷூவின் இறப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.