காயத்ரி ரகுராம், தனது பதினான்கு வயதில் பிரபுதேவா, பிரபு நடித்து வெளியான ‘சார்லி சாப்ளின்’ படத்தின் மூலமாக தமிழில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர், நடன இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இப்படி சினிமாவில் வலம் வந்த இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியில் ஓவியாவுடன் சண்டையிட்டு பல சர்சைகளில் சிக்கினார். குறிப்பாக அந்த சமயத்தில் சமூகவலைதளத்தில அதிகம் விமர்சிக்கப்பட்டார்.
இந்நிலையில் வெளியில் வந்ததும், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து செயல்பட்டார். ஆனால் அக்கட்சியில் சில பிரச்சனைகள் ஏற்படவே அதிலிருந்து விலகி தற்போது எந்த கட்சியிலும் சேராமல் உள்ளார். இந்த நிலையில் தனது சமூகவலைதள பக்கத்தில் தான் மொட்டையடித்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக “ 10 ஆண்டுகள் வேண்டுதல், திருப்பதியில் நிறைவேற்றி விட்டேன், ஓம் நமோ நாராயணா” என பதிவிட்டுள்ளார்.