Skip to content
Home » சென்னையில் விற்கப்படும் தாய்ப்பால்….. பகீர் தகவல்கள்

சென்னையில் விற்கப்படும் தாய்ப்பால்….. பகீர் தகவல்கள்

சென்னை மாதவரத்தில் உள்ள ஒரு மருந்து கடையில் தாய்ப்பால் விற்பனை நடைபெறுவது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டு அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இப்போது அரும்பாக்கத்தில் ஒரு கடையில் தாய்ப்பால், தாய்ப்பால் பவுடர் விற்பனை நடைபெறுவது குறித்து  உணவு பாதுகாப்பு அதிகாரி  சதீஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. எனவே அவர் அந்த கடைக்கு சென்று  சோதனை போட்டபோது 350 பாட்டில் தாய்ப்பால், 700 பாக்கெட்  தாய்ப்பால் பவுடர் ஆகியவற்றை பறிமுதல் செய்தார்.

அந்த கடைக்காரரிடம் நடத்தி்ய விவாரணையில், அந்த தாய்ப்பால் மற்றும் தாய்ப்பால் பவுடர் பெங்களூரில் இருந்து வருவதாகவும், அவற்றை விற்பனை செய்து வருவதாகவும் கூறினார். 100 எம்.எல். பால் ரூ.1300 வரை  விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இந்த பால் ஒரு வருடம் வரை கெட்டுப்போகாது என்று கூறி  விற்பனை செய்து வந்துள்ளார்.  அத்துடன் இந்த பால் ஒரிஜினலாக தாய்ப்பால் தானா என்பது குறித்து ஆய்வு நடத்த பறிமுதல் செய்யப்பட்ட பால் மற்றும் பவுடர் ஆய்வுக்கு அனுப்பப்படும் என்றும் சதீஷ்குமார் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!