திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் அருகே பிச்சாண்டார் கோயில் கள்ளர்தெருவைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் 23 வயதான ஆகாஷ்.இவர் திருச்சியில் உள்ள பிரபலமான துணிக் கடையில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 15 நாட்களாக சரியாக வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது தாயார் ஆகாஷை வேலைக்கு செல்லும்படி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஆகாஷ் நம்பர் 1 டோல்கேட் வாழவந்திபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.