நடிகர் ரோபோ சங்கர் தற்போது நடித்துவரும் அம்பி படப்பிடிப்பிற்காக கள்ளக்குறிச்சி வந்துள்ளார்.இந்நிலையில் அவர் நடித்து நேற்று வெளிவந்த சிங்கப்பூர் சலூன் படத்தினை திரையரங்கில் பார்ப்பதற்காக தனது குடும்பத்தினர் மற்றும் நடிகர் கஞ்சா கருப்பு இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பட குழுவினரோடு கள்ளக்குறிச்சி மகாலட்சுமி திரையரங்கிற்கு வந்திருந்தார்.அப்பொழுது நடிகர் கஞ்சா கருப்பு கூறுகையில்… ரோபோ சங்கர் விஜயகாந்தை போன்று குணம் படைத்தவர் எனவும் அவர் மேன்மேலும் வளர வேண்டும் எனவும் அவன் கேப்டன் போல் பேசுவார் எனவும் கூறியவுடன் ரோபோ சங்கர் ரசிகர்களின் வேண்டு கோளுக்கிணங்க விஜயகாந்த் வசனத்தை பேசி காண்பித்தார். மேலும் கஞ்சா கருப்பு கூறுகையில்… தனது மனைவிக்காக கட்டிய மருத்துவமனை சிக்கலில் உள்ளது. மகாலட்சுமி சினிமாஸ் போன்று தனது தாயின் பெயரில் (தாய்க்காக,மல்டிபிளக்ஸ் திரையரங்கு கட்ட போவதாகவும் அதில் ரோபோ சங்கரின் படத்தை தான் முதலில் வெளியிட வேண்டும் எனவும் கூறினார்.
