திருவெறும்பூர் அருகே மகன் காதல் தோழ்வியால் மன உளைச்சலில் இருந்த மகன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவர்களது பெற்றோர்களும் விஷம் குடித்துதற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சைக்கு பலன் இல்லாமல் தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் விண் நகர் நாலாவது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (50) இவரது மனைவி லட்சுமி (44) . இவர்களது மகன் தரேஷ்குமார் ( 21 ) இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் இந்த நிலையில் பெண் வீட்டார், அவரது காதலை ஏற்றுக் கொள்ளாததோடு பெண் தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த தரேஷ்குமார் திடீரென கடந்த மாதம் 23ம் தேதி விஷம் குடித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தங்கள் மகனே விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் பொழுது தாம் மட்டும் உயிரோடு இருந்து என்ன செய்யப் போகிறோம் என சுரேஷ் குமாரும் லட்சுமியும் விசம் குடித்துதற்கொலைக்கு முயன்றுள்ளனர் அவர்கள் மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் லட்சுமி சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.