திருச்சி , எடமலை பட்டி புதூர் ஆர் எம் எஸ் காலனி சேர்ந்தவர் ரங்கசாமி. இவரின் மனைவி தேன்மொழி(21), தனது இரண்டரை வயது குழந்தை விநாயகராஜ் உடன் அவரது சகோதரி வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டுக்கு அவர் திரும்பி வந்து பார்த்த பொழுது கணவர் ரங்கசாமி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த தேன்மொழி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, தனது உடைகளை எடுத்துக்கொண்டு மகனுடன் புறப்பட்டு சென்று விட்டார். வீட்டுக்கு திரும்பிய கணவர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து எடமலைபட்டிபுதூர் போலீஸ் ஸ்டேசனில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தாய்-மகனை தேடி வருகின்றனர்.