Skip to content
Home » சொத்துக்காக தாயின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற மகன்…. கொடூரம்…

சொத்துக்காக தாயின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற மகன்…. கொடூரம்…

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி சிவந்திப்பூ. இவருக்கு 4 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்க முன்னர் கணவர் இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார். அவர், புளி குத்தும் வேலைக்கு சென்று அதன் மூலம் வரும் வருமானத்தையும், முதியோர் பென்ஷன் மூலம் வரும் வருமானத்தையும் கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். உள்ளூரில் வசிக்கும் அவரது மகன் 50 வயதுடைய முருகன் ஒழுங்காக வேலைக்குச் செல்லாமல் மது அருந்தி விட்டு அடிக்கடி தனது தாயிடம் உள்ள பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு மது போதையில் வந்த முருகன் சிவந்திப்பூவிடம் அவர் இருக்கும் ஓட்டு வீட்டை தனது பெயருக்கு எழுதி தருமாறும் பணம் கேட்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு மூதாட்டி சிவந்திப் பூ மறுத்துள்ளார். மேலும் மகன் முருகனிடம் தனக்கு நோய்வாய்ப்பட்டு இருப்பதால் மாத்திரை வாங்கி தருமாறும் கூறியுள்ளார். முருகனுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில், ஒரு மகனை மெடிக்கலுக்கு சென்று மருந்து வாங்க அனுப்பியபோது அங்கு சிறுவன் மருந்து கேட்டதால் மருந்து கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதனை முருகனிடம் சிறுவன் தெரிவித்த நிலையில் நீ உயிரோடு இருப்பதே தேவையில்லாதது எனக் கூறி ஆத்திரமடைந்து சிவந்தி பூவின் கழுத்தை துணியால் இருக்கியும் வீட்டினுள் கிடந்த கல்லை கொண்டு தலையில் போட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த சிவந்திப்பூ சம்பவ இடத்திலேயே பலியானார்.

murder

தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் சிவந்திப்பூவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தனது தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த முருகனையும் உடனடியாக போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் முருகன் மது அருந்தும் பழக்கம் கொண்டவராகவும், மூதாட்டிக்கு வரும் பென்ஷன் ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்புடன் கொடுக்கப்பட்ட ஆயிரம் ரூபாயையும் சேர்த்து கேட்டதாகவும், ஓட்டு வீட்டை தனக்கு எழுதித் தருமாறும் கேட்டதில் தாய்க்கும் மகனுக்கும் சண்டை ஏற்பட்டதில் மது போதையில் இருந்த முருகன் ஆத்திரத்தில் கல்லை தூக்கி தலையில் போட்டு கொலை செய்ததும் தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *