தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நல சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய, சுகாதார, செவிலியர்கள், கூட்டமைப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் காயத்ரி தலைமையில் திருச்சி காட்டூர் பகுதியில் நடைபெற்றது.
இதில் ஜீவா, செல்வராணி, அனுராதா, ராணி, மாலதி, சந்தோஷ் மேரி, அர்ச்சனா, ஆகிய மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் சாந்தி வரவேற்பு ஆற்றினார். மாவட்ட பொருளாளர் பிருந்தா ஆண்டு அறிக்கை வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக செயல் தலைவர் கோமதி, மாநிலத் துணைத் தலைவர் விமலாதேவி,
ஆகியோர் கலந்து கொண்டு செவிலியர்களுக்கான உரிமைகள் என்னென்ன.செவிலியர்களின் பணி பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளிட்ட அறிவுரை ஆலோசனைகளை வழங்கினர். இதில் மாவட்ட தலைவர் காயத்ரி தேவி கூறுகையில்….
தாய் சேய் நலமுடன் இருப்பதற்காக செவிலியர்கள் பல்வேறு பணி சுமைகளை செய்து வருகிறோம் அப்படி செய்து வரும்போது அவர்கள் குடும்பத்தின் காரணமாக சரியா உணவு உட் கொள்ளாமலும் மாத்திரைகள் சாப்பிடாமலும் தாய் அல்லது குழந்தை இறப்பிற்கு எங்களை காரணம் காட்டி பதவி பறிப்பது என்பது மிகுந்த மன வருசத்துக்குள்ளானது. ஆண் பெண் இருவருக்கும் ஒரே தகுதி இருந்தும் பதவி உயர்வு வழங்குவதில் பாரபட்சம் காட்டுவது.
அதிக பணிச்சுமையை சுமத்துவது ஆன்லைன் பதிவில் கால தாமதம் ஏற்படுவதால் மன உளைச்சல் உண்டாகிறது. எல்லாம் அரசு கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் கோரிக்கையை ஏற்று சரி செய்து கொடுக்க வேண்டும். மேலும் உள்ளது என்று கூறினார்.