தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்காக காலை உணவுத்திட்டத்தினை மதுரையில் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் அடுத்தக் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,000 பள்ளிகளிலுள்ள 17 லட்ச மாணவர்கள் பயனடையும் வகையில் இன்று
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் விரிவுப்படுத்தி வைத்தார். இந்த நிலையில் இத்திட்டத்திற்காக நன்றி தெரிவிக்கும் வகையிலான ட்விட்கள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.