தமிழகத்தில் மத்திய உணவு திட்டம் விரிவாக்கப்பட்டு காலை உணவு திட்டமாக 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 17லட்சம் மாணவ மாணவிகளுக்கு விரிவாக்கப்பட்டது. அதன்படி இன்று காலை நாகை மாவட்டம், திருக்குவளையில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி படித்த ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார்.
இத்திட்டம் தமிழகம் முழுவதும் சுமார் 31,000 மேற்பட்ட பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாவட்டம், நாகமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மணிகண்ட ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மாணவ
மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி, முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள்கழகத் தொண்டர்கள் சுற்றுலா கலந்து கொண்டனர்.
ஏற்கனவே திருச்சி மாநகராட்சி பகுதியில் மரக்கடையில் உள்ள சையத் முர்த்தஷா மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் ரூபாய் 1.29 கோடி மதிப்பீட்டில் சமையல் கூட கட்டப்பட்டு 48அரசு பள்ளிகளில் ஏற்கனவே காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாவட்ட முழுவதும் இன்று இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது..