கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட லட்சுமணம்பட்டியில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பூக்குழி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக கடந்த 23ஆம் தேதி சனிக்கிழமை அன்று இரவு காப்பு கட்டுதளுடன் விழா தொடங்கியது. நேற்று காலை
பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் ஸ்ரீ ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் கோவிலில் இருந்து சக்தி கன்னிமார்களுக்கு அருள் அளித்து நெய் விளக்கு எடுத்து கொண்டு மேளதாளங்களுடன் ஊர்வலமாக லட்சுமணம்பட்டியில் உள்ள ஐயப்பன் திடலில் அமைக்கப்பட்டிருந்த ஆழி மூட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இரவு 7 மணி அளவில் ஆழி குரு சாமிகள், ஐயப்ப குருசாமிகள், முருகன் குருசாமிகள், அம்மன் குருசாமிகள் 1008 மந்திரங்கள் பாராயணம் செய்யப்பட்டு ஆழியை வலம் வந்தனர். அதனைத் தொடர்ந்து 1000க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபட்டனர். மேலும் விழா கமிட்டி சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.