பூமியைச் சுற்றி வரும் சந்திரன் ஈர்ப்பு விசையின் காரணமாகச் பூமியிலிருந்து நிலையான தூரத்தில் இருப்பதாகக் கருதப்பட்டது, ஆனால் நாசாவின் கூற்றுப்படி, சந்திரன் பூமியிலிருந்து மெதுவாக ஆண்டுக்கு 3.8 செமீ தூரம் விலகி செல்வதாக இங்கிலாந்தை சேர்ந்த நியூஸ் இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது. ‘மிலன்கோவிச் சுழற்சிகள்’ சந்திரன் பூமியிலிருந்து விலகிச் செல்வதற்குக் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். பூமியில் கிடைக்கும் சூரிய ஒளியின் அளவு அதன் காலநிலையைப் பாதிக்கிறது. இந்த சுழற்சிகளும் அவற்றின் அதிர்வெண்களும் சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரத்தையும் தீர்மானிக்கின்றன. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, சந்திரன் அதன் தற்போதைய தூரத்தை விட சுமார் 2.46 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கு 60,000 கிமீ நெருக்கமாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.