Skip to content

மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்குகிறார் சுந்தர்.சி..

  • by Authour

நயன்தாரா நடிப்பில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்குகிறார். முன்னதாக, மூக்குத்தி அம்மன் முதல் பாகம் படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்திருந்தார்.இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘அரண்மனை 4’. இதனைத் தொடர்ந்து, அவரது இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’ படம் உருவாகிறது. தமிழ்த் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா முதன்மையான வேடத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

அது மட்டுமல்லாமல், வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடிக்கிறாரா..? –  Kuttram Kuttrame

அசோசியேட்டாக தயாரிக்கிறது. மேலும், ஐவிஒய் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் பி ஃபோர் யூ மோஷன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணை தயாரிப்பாளராக உள்ளனர்.

மேலும், இந்த திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, சுந்தர்.சியின் கலக்கல் நகைச்சுவை பதத்தில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும், படப்பிடிப்பு விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!