புதுவை மாநிலத்தில் அரசின் எந்த உதவி திட்டங்களையும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1,000 உதவித்தொகை தர கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதாக மந்திரி தேனீ ஜெயக்குமார் கூறியுள்ளார். புதுவை மாநிலத்தில் 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் இருக்கும் அரசின் எந்தவிதமான மாதாந்திர உதவித்தொகையும் பெறாத வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதந்தோறும் தலா ரூ.1,000 வீதம் வழங்கப்பட உள்ளது.