தஞ்சையில் நாளை முதல் இரண்டு நாட்கள் சதய விழா நடைபெறுவதையொட்டி ராஜராஜ சோழன் சிலையை ஆய்வு செய்த மாவட்டகலெக்டர் பிரியங்கா பங்கஜம் நிருபர்களிடம் கூறியதாவது:
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அடுத்து அனைத்து உபகரண பொருட்களும் தயார் நிலையில் உள்ளது. மேலும் பொது மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களும் தயார் நிலையில் உள்ளது. வேறு எந்த பகுதியிலும் உடைப்பு ஏற்பட்டாலோ அதனை சரி செய்வதற்கான அனைத்து பொருட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கனமழை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு அனைத்து துறைகளும் ஆயத்த பணியில் உள்ளது. முக்கியமாக எந்த இடங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது அந்த இடங்களில் என்னென்ன செய்ய வேண்டும் எனவும் இரண்டு விதமாக பிரிக்கப்பட்டுள்ளது
தற்காலிகமாக எதை சீரமைக்க வேண்டும் அல்லது நிரந்தரமாக தீர்வு காண வேண்டும் என இரண்டு விதமாக பிரித்து வைத்துள்ளோம் தற்போது பிரச்சனைகளை அணுகி ஒவ்வொரு துறையாக துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாதவாறு மாவட்ட நிர்வாகம் அனைத்து நிலையிலும் தயாராக உள்ளது. ஒரு வேளை அதிகமாக மழை பெய்கிறது என்றால் மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது பற்றி முடிவு எடுக்கப்படும். பள்ளி கட்டிடங்கள் அபாயகரமாக பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை கண்டறிந்து ஆராய்ந்து அதனை இடித்து முடிக்கக்கூடிய பணிகள் நிறைவடையக்கூடிய சூழ்நிலையில் உள்ளது.
பள்ளி வளாகத்திற்குள் தண்ணீர் புகுந்தால் உள்ளாட்சி அதிகாரிகளை வைத்துஅதனை சரி செய்யும் பகுதி நடைபெற்று வருகிறது மேலும் 24 மணி நேரமும் கண்காணிக்க கூடிய அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது பொதுமக்கள் அவசரமாக அழைக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.