திருச்சி பேர்ட்ஸ் ரோடு பகுதியில் கார் உதிரி பாகம் விற்கும் கடை உள்ளது.இந்த கடையை செல்வராஜ் என்பவர் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு செல்வராஜ் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை கடையின் ஊழியர் கடையை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் .பிறகு உள்ளே சென்று பார்த்த பொழுது கல்லா பெட்டியில் இருந்த ரூபாய் 63 ஆயிரம் பணம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடையின் உரிமையாளர் செல்வராஜ்க்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து அவர் கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம ஆசாமியை வலைவிசி தேடி வருகின்றனர்.
கார் உதிரிப்பாகம் விற்கும் கடையில் பணம் திருட்டு… திருச்சியில் துணிகரம்…
- by Authour
