திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோயில் அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் பல்வேறு மாவட்டங்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் பக்தர்கள் தரிசன செய்ய இலவச தரிசனம் கட்டணம் மற்றும் சிறப்பு கட்டணம் உள்ளது. இந்நிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ள சமயங்களில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் பக்தர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு விரைவு தரிசனத்திற்கு செல்வதாக புகார் வந்தது. இந்நிலையில் நேற்று வெளியூரில் இருந்து வந்த பக்தர்களிடம் விரைவு தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி பணத்தை
பெற்றுக் கொண்டு மாயமானார். இது குறித்து கோயில் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.பின்னர் கோயில் பணியாளர்கள் அந்த நபரை சமயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என தெரியவந்தது.அவரை எச்சரித்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.