யோகாவை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி 10-வது யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்தியாவில் யோகா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் இன்று யோகாசன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.அந்த வகையில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு யோகாசனம் செய்தார். பிரதமருடன் 7,000-க்கும் மேற்பட்டோர் யோகாசனம் செய்கின்றனர். இதற்காக தால் ஏரிக்கரையில் உள்ள மாநாட்டு மையத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
