காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு இன்று 76வது பிறந்தநாள். இதையொட்டி காங்கிரசார் சோனியாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகிறார். பிரதமர் மோடி, சோனியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.