ரூ.2,467 கோடி புதிய விமான நிலைய முனையம் உள்பட பல்வேறு திட்டங்களை துவங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். அவர் வருகையையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக வருகையை முன்னிட்டு பிரதமர் மோடி, தன்னுடைய டிவிட்டரில் … தமிழக பயணம் தொடர்பாக தமிழ் மொழியில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறும்போது, “சென்னையில்,சென்னை விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடம் திறந்து வைக்கப்படவுள்ளது. தொடர்ந்து, சென்னை – கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை துவக்கி வைத்து, பிறகு ஶ்ரீராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு நிறுவன விழாவிலும் கலந்து கொள்ள உள்ளேன்” என்று இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.