அதிமுக எடப்பாடி அணியின் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் தம்பிதுரை. இவர் இன்று பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து தம்பிதுரையிடம் கேட்டபோது, நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டுக்கு வாழ்த்து தெரிவிக்க சந்தித்ததாக கூறினார்.

உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனு விசாரணை நாளை வர உள்ள நிலையில், ஓபிஎஸ் சார்பில் அந்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதே நேரத்தில் சசிகலாவும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு அதிமுக எடப்பாடி அணிக்கு முக்கியம் வாய்ந்த வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தம்பிதுரை பிரதமரை சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.