அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி,உள்ளிட்ட தலைவர்கள், பிரபலங்கள் பங்கேற்கிறார்கள். இந்த விழாவுக்கு முதல் நாள்(21ம் தேதி) பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேம் வரும் 22ம் தேதி நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக 108 வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசித்து விட்டு அயோத்தி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதமர் மோடி இங்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி திருச்சி விமான நிலையம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் முதல்கட்ட ஆய்வு பணிகளை செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளும் வந்து ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
