78வது சுதந்திர தின விழாவையொட்டி டில்லியில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:
6 ஜி தொழில் நுட்பத்தை நோக்கி நாடு வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது. இதற்காக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை எடுத்து வருகி்றோம். பாதுகாப்புத்துறையில் நாம் தன்னிறைவு அடைந்து வருகிறோம். பாதுகாப்பு தளவாட உற்பத்தியின் உலக மையமாக இந்தியா மாறும். நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் புதிதாக 75 ஆயிரம் இடங்கள் ஏற்படுத்தப்படும். நமது மாணவர்கள் இந்தியாவிலேயே மருத்துவம் படிக்க இந்த இடங்கள் அவசியம்.
கொரோனாவுக்கு பிறகு நாட்டின் பொருளாதாரத்தில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. பெண்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். 40 கோடி இந்தியவர்கள் வெள்ளையர்களை வெளியேற்றினார்கள். இப்போது 140 கோடி இந்தியர்கள் சேர்ந்து இந்தியாவை உயர்த்த வேண்டும். சமத்துவம், பேணி காப்போம். வின்வெளித்துறையில் நாம் முன்னணியில் உள்ளோம்.
இந்தியாவில் நீதித்துறையில் மாற்றம் தேவை. மாற்றத்தை கொண்டு வருவோம். நாங்கள் கொண்டு வருவது அரசியல் சார்ந்த மாற்றம் அல்ல. நாட்டின் முன்னேற்றம் சார்ந்தது. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அனைவரும் பாடுபடவேண்டும். இந்தியாவை வல்லரசாக்கும் கனவை 2047க்குள் நிறைவேற்ற வேண்டும். இந்தியா வல்லரசு ஆக வேண்டுமென்றால் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். 140 கோடி இந்தியர்களும் ஒன்று சேர்ந்து தீவிரமாக உழைத்தால் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசு நாடாகும். உலக பொருளாதாரத்தில் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.