பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை டில்லியில் நடப்பு மத்திய அமைச்சரவையின் கடைசி கூட்டம் நடந்தது. இதில் அமைச்சரவையை ராஜினாமா செய்து விட்டு 18வது மக்களவை பதவியேற்பு விழா நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் அமைச்சரவையை கலைக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யும் கடிதம் தயாரிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் அந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு பி்ரதமர் மோடி ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி முர்முவை சந்தித்து கொடுத்தார். அத்துடன் புதிய அமைச்சரவை அமைக்க தங்களை அழைக்கும்படியும் கோரிக்கை விடுப்பார் என தெரிகிறது. மோடியுடன் ராஜ்நாத்சிங் மற்றும் அமித்ஷா ஆகியோரும் ஜனாதிபதியை சந்திக்க சென்றனர்.
அதைத்தொடர்ந்து இன்று மாலை புதிய அமைச்சரவை அமைக்கும்படி மோடிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.