Skip to content

இந்தியாவுடன் நட்பு மேலும் வளரும்- மோடியை சந்தித்த டிரம்ப் பேட்டி

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்து பேசினார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3 மணி அளவில்  டொனால்டு டிரம்ப் – பிரதமர் மோடி சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது டொனால்டு டிரம்ப் பேசியதாவது:

இந்தியாவுக்காக மிகச்சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா  செய்ய இருக்கிறது. அதிக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை இந்தியா கொள்முதல் செய்ய இருக்கிறது. பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர். மிகச்சிறப்பாக செயல்படுகிறார்.இந்தியாவுடனான நட்பு வரும் காலங்களில் இன்னும் நெருக்கமாகும். பிரதமர் மோடி என்னுடைய சிறந்த நண்பர். அவரை வெள்ளை மாளிகைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் வர்த்தகம்  உள்ளிட்ட  பல விஷயங்கள் பற்றி  நாங்கள் பேச இருக்கிறோம்” என்றார்.

முன்னதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்ட தொழிலதிபர்களையும் பிரதமர்  மோடி சந்தித்து ஆலோசித்தார். அதைத்தொடர்ந்து அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி  இந்தியா புறப்பட்டார்.

error: Content is protected !!