மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது… செந்தில் வேல் நடத்தி வரும் தமிழ் கேள்வி வலைக்காட்சியில் ஒளிபரப்பான 10 காணொளிகளை நீக்கச் சொல்லி ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும் YouTube நிறுவனத்திற்கும், ஒன்றிய அரசு இது தொடர்பாக அழுத்தம் கொடுத்துள்ளது.
இதையடுத்து மோடி , ஆளுநர் ஆர்.என்.ரவி , எடப்பாடி பழனிசாமி, சீமான் ஆகியோர் குறித்தும், சிறைவாசிகள் விடுதலை, மணிப்பூர் கலவரம் உள்ளிட்டவை குறித்தும் செந்தில் வேல் பதிவேற்றிய காணொளிகள் YouTube பக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. தேர்தல் நெருங்க நெருங்கப் பாசிச மோடி அரசின் அச்சம் அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது. கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான மோடி அரசின் இதுபோன்ற செயல்களை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தொடர்ந்து ஒடுக்கப்பட்ட ,சிறுபான்மை சமூக மக்களுக்காகத் தொடர்ந்து பேசி வரும் செந்தில் வேலின் சமூக நீதிக் குரலுக்கு மனித நேய மக்கள் கட்சி என்றும் துணை நிற்கும்.