Skip to content
Home » பிரதமர் மோடி ஜப்பான் சென்றார்….ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்

பிரதமர் மோடி ஜப்பான் சென்றார்….ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்

ஜப்பான் நாட்டின் தலைமையின் கீழ் ஜி-7 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வரும்படி பிரதமர் மோடிக்கு, ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா அழைப்பு விடுத்து  இருந்தார்.   இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, இன்று முதல் 21-ந்தேதி வரை 3 நாட்கள் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.  இதற்காக இன்று பிரதமர் ஜப்பான் புறப்பட்டு சென்றார்.

இந்த உச்சி மாநாட்டில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் நீடித்த வளம் ஆகியவை பற்றி உறுப்பு நாடுகளுடனான ஜி-7 கூட்டத்தொடரில் பிரதமர் மோடி பேச இருக்கிறார். உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக அதில் பங்கேற்கும் தலைவர்கள் சிலருடன் இருதரப்பு சந்திப்புகளையும் அவர் நடத்துகிறார். இதன்பின் பப்புவா நியூ கினியாவுக்கு 22-ந்தேதி செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மரேப் உடன் இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் 3-வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார்.

இதனை தொடர்ந்து வருகிற 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரையிலான 3 நாட்களில் ஆஸ்திரேலியாவுக்கு, அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அழைப்பின் பேரில் செல்லும் பிரதமர் மோடி, குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். வருகிற 23-ந்தேதி இந்திய வம்சாவளியினர் முன் உரையாற்றுகிறார். வருகிற 24-ந்தேதி பிரதமர் அல்பானீசுடன் இருதரப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அந்நாட்டின் சி.இ.ஓ.க்கள் மற்றும் வர்த்தக தலைவர்களுடனும் அவர் உரையாட இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!