திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத்நகர் மீன் மார்கெட் அருகே மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், மீன் பிடிக்கின்ற உரிமைகளையும், உடைமைகளையும் பாதுகாக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், தூத்துக்குடி குலசேகரபட்டிணம் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கறுப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன் தலைமையில் நடைபெற்றது, நகர காங்கிரஸ் தலைவர் எம்.சி.சதிஷ் குமார், வட்டார தலைவர்கள் மேற்கு கோவி.ரெங்கசாமி, கிழக்கு வடுகநாதன், மாவட்ட மீனவர் அணி தலைவர் நிஜாம் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாநில பொதுக்குழு உறுப்பினர் மெட்ரோ மாலிக் வரவேற்று பேசினார். இதில் இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் பாட்சா, மாவட்ட துணைத் தலைவர் நபீஸ், விசிக
மாவட்ட செயலாளர் வெற்றி, மார்க்சிஸ்ட் நகர செயலாளர் செல்லத்துரை, மாவட்ட சிறுபாண்மை துறை தலைவர் சையத் முபாரக், மாவட்ட துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் ஜெகபர் அலி, சுந்தரராமன், மாவட்ட அமைப்பு செயலாளர் தக்பீர் நெய்னா முகமது, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் ராஜ்மோகன், எஸ்சி துறை மாநில செயலாளர் ஜேம்ஸ், சட்டமன்ற பொறுப்பாளர் உப்பூர் கோவிந்தராஜ், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு ஆகியோர் பேசினார்கள். இதில் வட்டார செயலாளர் விஜயகாந்த், விசிக நகர செயலாளர் கண்ணதாசன்ம முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முகைதீன் பிச்சை, கொரடாச்சேரி நகர தலைவர் நடராஜன், மன்னார்குடி நகர தலைவர் கனகவேல், சேவாதள மாவட்ட தலைவர் சிட்டி சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், ஆனந்த், நகர வர்த்தகக் அணி தலைவர் ராசிக், மீனவர் அணி நகர தலைவர் அப்துல் ரஹ்மான், நகர பொருளாளர் குலாம் ரசூல், நகர ஐடி விங் தலைவர் பைசல், சேவாதள தலைவர் ரமேஷ், நிர்வாகிகள் ராஜதுரை, இஜாஸ், திருநாவுக்கரசு, மகாதிர், ஆதில் மற்றும் ஏராளமான மீனவர்கள் உட்பட பலரும் கலந்துக்கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராகவும் மீனவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோசங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் முடிவில் திடீரென்று அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்ட காங்கிரசார் அருகே உள்ள கோரையாற்றில் இறங்கி பின்னர் அங்கு நிறுத்தப்பட்ட மீனவர்களின் படகுகளில் ஏறிநின்று தமிழகம் வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன கோசங்கள் எழுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.