சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் நிகழ்வை பிரதமர் மோடி காணொலி மூலம் கண்டுகளித்தார். வெற்றிகரமாக தரையிறங்கியதும், அவர் கையில் வைத்திருந்த தேசிய கொடியை அசைத்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
அப்போது மோடி பேசுகையில், சந்திரயான் 3 வெற்றிக்காக உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். இப்போது இந்தியா நிலவில் உள்ளது. நிலா நிலா ஓடி வா பாடலை மெய்ப்பித்து விட்டனர். அடுத்தது நிலவுக்கு மனிதனை அனுப்புவது இலக்கு. அதேபோல் விரைவில் சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்பப்படும் என்றார். அதேபோல் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜு கார்கே உள்ளிட்ட அனைத்து தேசிய தலைவர்களும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.