ஜப்பானில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட பின் பிரதமர் மோடி பப்புவா நியூகினியா சென்றார். பின்னர் அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிசை மோடி சந்தித்தார். பின்னர் ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதன் பின்னர் சிட்னியில் இரு நாட்டு தலைவர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி மற்றும் இந்திய பிரதமர் மோடி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உறவு டி20 கிரிக்கெட் முறையில் உள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பையை நேரில் காண வரும்படி பிரதமர் அந்தோணி அல்பானிஸ் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். அந்த நேரத்தில் நீங்கள் இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டத்திலும் பங்கேற்கலாம். கிரிக்கெட்டின் மொழியில் நமது உறவு டி20 முறைக்கு சென்றுவிட்டது’ என்றார்.