மாடர்ன் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நடிகை அஞ்சு குரியன் வெளியிட்டுள்ளார்.
ரசிகர்களிடையே அதிக கிரேஸ் உடைய நடிகைகளில் ஒருவர் அஞ்சு குரியன். மலையாள நடிகையான இவர், சிறந்த மாடல் அழகியாக இருந்தவர். மலையாளத்தில் ‘கவி உதேசிச்சத்து’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன்பிறகு தமிழில் ‘பிரகாஷ்’ என்ற படத்தில் நடித்தார்.
இதையடுத்து சென்னை டு சிங்கப்பூர், ஜூலை காற்றில், இக்ளூ, சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதேபோன்று சூப்பர் ஹிட் திரைப்படமான ‘நேரம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதைத்தொடர்ந்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
க்யூட்டான நடிகையான அஞ்சு குரியன், மாடர்ன் லுக்கில் மின்னும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.