வங்க கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் காலை
முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தற்போது கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவகர் பஜார் ,காந்திகிராமம், பசுபதி பாளையம், தான்தோன்றி மலை, வெங்கமேடு, சின்ன ஆண்டாங்கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக குளிர்ந்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக வான ஓட்டிகள் மற்றும் வேலை செல்லும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.