திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்க்கு ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு பெட்ரோல் பங்க்கில் ஏற்படும் திடீர் விபத்துக்களை தடுக்க தயார் நிலையில் பாதுகாப்பான உபகரணங்கள்,தீ தடுப்பு உபகரணங்கள் இருக்கிறதா என்பதை அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து தேவையான உபகரணங்களை பயன்பாட்டிற்கு அமைத்து தருவார்கள்.
இந்நிலையில் இன்று திருச்சி சர்வதேச விமான நிலைய எரிபொருள் நிரப்பும் பங்கில் தீயணைப்பு ஒத்திகை நடைபெற்றது.
இந்நிகழ்வில் எரிபொருள் விற்பனை நிலைய ஊழியர்கள், விமான நிலைய தீயணைப்பு படைவீரர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர். சுமார் ஒருமணி நேரம் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்வில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் மாலதி, துணை இயக்குனர் ஸ்ரீதர் இதனை தலைமை தாங்கி நடத்தினர்.