திருச்சி மாவட்டம் முசிறி காவல் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து தருமாறு செல்போன் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். முசிறி டிஎஸ்பி யாஸ்மின் உத்தரவுப்படி காவல் ஆய்வாளர் கதிரேசன் மேற்பார்வையில் ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். செல்போனின் இஎம் இ எண் வாயிலாக காணாமல் போன 22 செல்போன்களை தனிப்படையினர் மீட்டனர்.
இதையடுத்து டிஎஸ்பி யாஸ்மின் தலைமையில் காவல் ஆய்வாளர் கதிரேசன் முன்னிலையில் நேற்று 22 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உரிமையாளர்கள் செல்போன்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு காவல்துறையினருக்கு நன்றி கூறி சென்றனர். செல்போன்களை கண்டுபிடிப்பதில் முக்கிய பணியாற்றிய காவலர் சூர்யாவிற்கு காவல் ஆய்வாளர் கதிரேசன் மற்றும் டிஎஸ்பி யாஸ்மின் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
