Skip to content

திருச்சியில் வாக்கிங் சென்றவரிடம் கத்தி முனையில் செல்போன் பறிப்பு…

திருச்சி கீழ கல்கண்டார் கோட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் பரமசிவம் . இவரது மகன் குருமூர்த்தி (வயது 45). இவர் திருச்சி பொன்மலைப்பட்டி மெயின் ரோடு ஆஞ்சநேயர் கோவில் அருகே நடை பயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் இவரிடம் கத்தி முனையில் மிரட்டி பணத்தை பறித்து சென்று விட்டார். இதுகுறித்து குருமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து இந்த சம்பவம் தொடர்பாக பொன்மலை பட்டியைச் சேர்ந்த பிரவீன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு சம்பவத்தில் திருச்சி செந்தண்ணீர்புரம் முத்துமணி டவுன் பகுதியைச் சேர்ந்த சம்பத் ( வயது 55) என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார் .அப்போது நிறுவனத்தின் வாயில் பகுதியில் பணியில் இருந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மூன்று பேர் அவரைத் தாக்கி கத்தி முனையில் பணம் ,செல்போனை பறித்து சென்று விட்டனர். இது குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து விஷால் கிருஷ்ணா, உதுமான் அலி, அன்வர் பாட்ஷா ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இதில் உதுமான் அலி ரவுடி பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!