Skip to content
Home » எம். எஸ் பாஸ்கருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது …

எம். எஸ் பாஸ்கருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது …

பிரபல நடிகர் எம்.எஸ் பாஸ்கருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது எம். ஜி. ஆர் பல்கலைகழகம்.

photo

நாடக கலைஞராக  தனது நடிப்பை தொடங்கிய எம்.எஸ் பாஸ்கர், சின்னத்திரையில் நுழைந்து பட்டாபி மாமாவாக ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தொடர் மூலமாக பரிட்சயமானார். தொடர்ந்து தனது கடின உழைப்பால் வெள்ளிதிரையிலும் ஜொலிக்க தொடங்கினார். அதாவது 1987ல் தனது திரைத்துறை பயணத்தை தொடங்கிய இவர் கிட்டத்தட்ட 3 தசாப்தங்களாக இந்த துறையில் மின்னிவருகிறார். காமெடியன், குணச்சித்திர வேடம் என எது கொடுத்தாலும் அந்த பாத்திரமாகவே ஒன்றிவிடுவார்.

photo

எம்.எஸ் பாஸ்கர் இருநூறுக்கும் மேற்பட்ட படங்கள், எக்கச்சக்க தொடர்கள் என இன்று வரை மக்களை மகிழ்வித்துக்கொண்டிருக்கும் இந்த நாயகனுக்கு,  எம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தின் விஸ்காம் துறையின் கீழ்  வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருது இன்மாதம் அக்கல்லூரியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தற்போது எம்.எஸ் பாஸ்கர் நடிப்பில் சாமணியன்,திரோடு ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!