அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதி, உடையார்பாளையம் பேரூராட்சியில்,
1). வார்டு எண் 14-ல்,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2022 – 2023 கீழ்,ரூபாய் 18.00 இலட்சம் மதிப்பீட்டில்,
புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடை கட்டிடத்தை திறந்து வைத்தும்,
2). சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2024 – 2025 கீழ்,வார்டு எண் 11-ல்,ரூபாய் 17.71 இலட்சம் மதிப்பீட்டில்,புதிய அங்கன்வாடி கட்டிட கட்டுமான பணியை துவக்கி வைத்தல்,
3). வார்டு எண் 08-ல்,ரூபாய் 8.20 இலட்சம் மதிப்பீட்டில்,பட்டத்து மாரியம்மன் கோவில் தெருவில்,பேவர் பிளாக் சாலை அமைத்தல்,
4) வார்டு எண்: 7-ல்,ரூபாய் 2.00 இலட்சம் மதிப்பீட்டில்,மருத்துவர் தெருவில்,சிறு பாலம் அமைத்தல்,
5). வார்டு எண்:8-ல்,ரூபாய் 2.00 இலட்சம் மதிப்பீட்டில்,சேர்வைக்காரத்தெருவில்,சிறு பாலம் அமைத்தல்,
6). வார்டு : 14-ல் SFC திட்டம் 2024 – 2025-ன் கீழ்,ரூபாய் 17.00 இலட்சம் மதிப்பீட்டில், மூர்த்தியான் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல்,
7). வார்டு எண்: 15-ல் SFC திட்டம் 2024 2025- கீழ், 10.00 தெற்கு தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல்,
8)வார்டு எண்: 11-ல் SFC திட்டம் 2024-2025 கீழ்,ரூ 10.00 இலட்சம் மதிப்பீட்டில் புது தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல்,
9) வார்டு எண்: 5 -ல் NSMT திட்டம் 2024-2025 ன் கீழ்,புகையிலைகாரத் தெருவில் ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்தல்
10) வார்டு எண்: 2-ல் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்
2024-2025 ன் கீழ்,ரூ 5.20 இலட்சம் மதிப்பீட்டில் சிறு பாலம் அமைத்தல்,
11) வார்டு எண்: 17-ல், SFC திட்டம் 2024 – 2025 கீழ், 15.00 இலட்சம் மதிப்பீட்டில், புதுத்தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல்,
ஆகிய பணிகளை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் உடையார்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தன.சேகர், உடையார்பாளையம் பேரூராட்சி தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார்,துணைத் தலைவர் அக்பர் அலி, உடையார்பாளையம் பேரூர் கழக செயலாளர் ப.கோபாலகிருஷ்ணன்,பொதுக்குழு உறுப்பினர் வி.எம்.ஷாஜஹான், வருவாய் ஆய்வாளர் M.குமார், கிராம நிர்வாக அலுவலர் A.அணிதா மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், பேரூர் கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.