வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் கடந்த மாதம் 7ம் தேதி சட்டமன்றதேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இன்று காலை இங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் சோரம் மக்கள் இயக்கம் முன்னணி (இசட் பி. எம்)26 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலை நீடித்தால் லால்துஹோமா தலைமையிலான சோரம் மக்கள் இயக்கம் முன்னணி ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் ஜோரம் தங்கா தலைமையிலான தற்போதைய ஆளுங்கட்சி மிசோரம் தேசிய முன்னணி (எம்.என்.எப்) 10 இடங்களிலும், பாஜக 3, காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னணியில் உள்ளது.
ஏற்கனவே இங்கு ஆளுங்கட்சியாக இருந்த எம்.என்.எப். இப்போது பின் தங்கி உள்ளது.