வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் கடந்த மாதம் 7ம் தேதி சட்டமன்றதேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இன்று காலை இங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் சோரம் மக்கள் இயக்கம் முன்னணி (இசட் பி. எம்)27 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. இந்த முன்னணியில் தலைவர் லால்துஹோமா முதல்வர் ஆவார் என தெரிகிறது.
தற்போதைய முதல்வர் ஜோரம் தங்கா தலைமையிலானஆளுங்கட்சி மிசோரம் தேசிய முன்னணி (எம்.என்.எப்) 10 இடங்களிலும், பாஜக 2, காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. .
அத்துடன் முதல்வர் ஜோரம் தங்காவும் தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்து உள்ளார். இவர் கிழக்கு ஐஸ்வால் தொகுதியில் போட்டியிட்டார். எதிர்த்து போட்டியிட்ட இசட் பி. எம். கட்சி வேட்பாளர் லால்தன்சங்காவிடம் இவர் 2101 ஓட்டுகள் குறைவாக பெற்று தோல்வியை சந்தித்தார்.