புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் ஒன்றியம் மிரட்டுநிலையில் புதிய மின்மாற்றியினை மக்கள் பயன்பாட்டிற்காக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இயக்கி வைத்தார்.அனைவரையும் மிரட்டுநிலை ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி வரவேற்றார்.நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி அரிமளம் ஒன்றிய பெருந்தலைவர் மேகலா முத்து ,செயற்பொறியாளர் ஆனந்தாய், உதவி செயற்பொறியாளர் முத்துச்சாமி, உதவி
பொறியாளர் கண்ணன், வடக்கு ஒன்றிய திமுக. செயலாளர் பொன். ராமலிங்கம் , தெற்கு ஒன்றிய செயலாளர் வீ.ஆர். இளையராஜா, மாவட்ட கவுன்சிலர் கலைவாணி சுப்பிரமணியன் , பொதுக்குழு உறுப்பினர் சீனி பழனியப்பன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கலைச்செல்வன், நகர செயலாளர் நாசர்,பேரூராட்சி தலைவர் மாரிக்கண்ணு முத்துக்குமார், மிரட்டுநிலை ஊராட்சி நிர்வாகிகள் ரவிச்சந்திரன்,செல்வராஜ் ,நல்லையா பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் , சடையம்பட்டியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமினை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.